5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்குள் நுழைவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டின் 5 ஆம் வகுப்புப் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு 6 ஆம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
2025.03.14 முதல் மாணவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலைகளை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று பார்வையிடலாம்.
2024 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் முடிவுகளின் அடிப்படையில் தகுதி பெற்றிருந்தாலும், இந்த வெட்டுப்புள்ளிகளின் படி பாடசாலை ஒதுக்கப்படாத வேறு நியாயமான காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்கள், இணையவழி (Online) மூலம் மேல்முறையீடு செய்ய விரைவில் வசதிகள் செய்யப்படும். அத்துடன் மேல்முறையீடு செய்யக்கூடிய காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும்.
அனைத்து மேல்முறையீடுகளும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சிற்கு இந்த இணையவழித் திட்டம் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




