2025ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2025.03.17ஆம் திகதி தொடக்கம் மார்ச் 26ஆம் திகதி வரை நாடுபூராகவும் நடைபெறவுள்ளது.
அதனடிப்படையில் மார்ச் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினமாக இருப்பதனாலும் ஜுமுஆவுக்குப் பிறகும் பரீட்சைகள் நடைபெறவிருப்பதனாலும் மாணவர்களது செளகரியம் கருதி அன்றைய தினம் ஜுமுஆ பிரசங்கம் மற்றும் தொழுகையினை பிற்பகல் 1.00 மணியளவில் முடிவுறும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டிக் கொள்கிறது.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இப்பரீட்சையினை சிறந்த முறையில் எதிர்கொண்டு அதிசிறந்த சித்திகளைப் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக!
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை