கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்து வினைத்திறனாக செயற்பட வைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறிப்பாக கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தை வினைத்திறனாக முன்னெடுப்பது, காணி பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்களுடனான கலந்துரையாடல், செயலிழந்து காணப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி புழுதியாறு ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை செயற்படுத்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
எதிர்காலத்தில் கரைச்சி பிரதேச சபையிடம் கையளித்து வினைத்திறனாக முன்னெடுப்பது தொடர்பாகவும் குறித்த விடயத்தை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சமர்ப்பிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் காணி நளாயினி இன்பராஜ் ,வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத்தலைவர் ஆர். உமாகரன், ,பிரதேச செயலாளர், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ,கரைச்சி பிரதேச செயலாளர், வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
