புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களுக்கிடையில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற அணிக்கு 11 பேர் பங்குபற்றிய, மட்டுப்படுத்தப்பட்ட 6 ஓவர்களைக் கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் 2013 ஆண்டு அணி சாம்பியன் ஆனது.
சுமார் 25 அணிகள் பங்குகொண்ட சீசன் 2 சுற்றுத்தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி 2013 ஆண்டு அணி வெற்றிபெற்று மகுடம் சூடிக்கொண்டது.
தொடரின் ஆரம்பம் முதல் அபாரமான திறமையை வெளிப்படுத்திய 2005 ஆண்டு அணி மற்றும் 2013 ஆண்டு அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தியது.
இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 2013 ஆண்டு அணியினர் நிரணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 83 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2005 ஆண்டு அணியினர் 6 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 36 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை சந்தித்ததுடன், தொடரின் இரண்டாம் இடத்தையும் தட்டிப்பறித்தது.
தொடரில் சாம்பியன் ஆன 2013 ஆண்டு அணியினருக்கு 50 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும், வெற்றிக்கேடயமும் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட 2005 ஆண்டு அணியினருக்கு 30 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும், கேடயமும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் நடப்பு சாம்பியனான 2004 ஆண்டு அணியினர் இம்முறை 2003 ஆண்டு அணியுடன் மோதி தோல்வியை சந்தித்து தொடரை விட்டு வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
