முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு வடக்கின் பல பகுதிகளிலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முரசுமோட்டை வட்டாரத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி முன்றலில் இன்று (18)நடைபெற்றது.
வட்டார தமிழரசுக்கட்சி இளைஞர் அணி செயற்பாட்டாளர் அ.பமீகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழரசுக்கட்சி சார்பாக குறித்த வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட பரமலிங்கம் பாஸ்கரன் கலந்து கொண்டு இரத்ததான நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சி பல பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில் வகையில் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஏற்பாட்டில் முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி இன்றைய இறுதி நாளில் வழங்கப்பட்டது.
மேலும் யுத்தம் முடிந்து 16வருடங்கள் ஆகின்ற நிலையில் அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்க வலியுறுத்தியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா அவர்களினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தை நோக்கி தர்மபுரம் பகுதியிலிருந்து ஊர்தி முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை இறுதிப்போரில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் 16ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய குறிப்பிடத்தக்கது.


