இலங்கை காவல்துறை மற்றும் சிறப்பு போதை ஒழிப்பு பிரிவால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தேடுதல் நடவடிக்கையில் கடந்த 2025 ஜூன் மாதம் 16 ஆம் தேதி அதிக அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
04 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன் பொலிசாரின் சமிக்ஞையை மீறி சென்ற வாகனத்தைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
பதில் பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கிணங்க நாடுபூராகவும் நடைமுறைக்கு வரும் வகையில் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை பொலிசாரால் மேற்கொள்ளப்படும் சுற்றிளைப்புகளின் போது 16.06.2025 ஆந் திகதி இரவு வேளையில் கடலோர பொலிஸ் பிரதேசத்தில் பொலிசார் இரவு நேர மோட்டார் சைக்கிள் ரோந்து கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளை ஹெட்டியாவத்தை சந்திக்கு அருகாமையில் அதிக வேகத்தில் செலுத்திய காரை நிறுத்துமாறு பொலிசார் சமிக்ஞையிட்டனர்.
அவ்வேளையில், கார் பொலிசாரின் சமிக்ஞையை மீறி பயணித்த போது இரவு நேர ரோந்து கடமையிலிருந்த பொலிசாரால் மோட்டார் சைக்கிளில் அந்த காரை பின்தொடர்ந்து புறக்கோட்டை, ரெக்லமேஷன் வீதி, கடலோர வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை பரிசோதனைக்குற்படுத்தினர்.
அவ்வேளையில் காரைச் செலுத்திய சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், காரில் 04 ப்ளாஸ்டிக் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோகிராம் 112 கிராம் எடைக் கொண்ட ஐஸ் போதைப் பொருள் மற்றும் காரையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த தினத்தில் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின்போது, தெஹிவளை பகுதியில் 105500 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 5430 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், பேலியகொட பகுதியில் 15.75 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், காங்கேசன்துறை பகுதியில் 12.4 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மெதிரிகிரிய பகுதியில் 315 கிராம் ஹெரோயின் மற்றும் 2.3 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அம்பாறை பகுதியில் 11.52 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.