Wednesday, July 2, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇரகசிய வாக்கெடுப்புக்கு SLMC எதிர்ப்பாம்!

இரகசிய வாக்கெடுப்புக்கு SLMC எதிர்ப்பாம்!

கொழும்பு மாநகர மேயர் தெரிவில் பகிரங்க வாக்கெடுப்பைத் தவிர்த்து இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை  சட்டப்படி தவறான நடவடிக்கையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (18) இடம்பெற்ற வெளிநாட்டு தீர்ப்புகளை பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கொழும்பு மாநகர சபை மேயர், பிரதி மேயர் ஆகிய நியமனங்கள் தொடர்பில் பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆளும் தரப்பினர் தமக்கு ஏற்றால் போல் சட்ட ஏற்பாடுகளை குறிப்பிட்டு கருத்துக்களை முன்வைக்கின்றனர். 

2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூராட்சி சபை கட்டளை வாக்கெடுப்பு சட்டத்தின் 66 (ஈ) பிரிவில், பொதுக் கொள்கை அடிப்படையின்படி பகிரங்க வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த சட்டத்தின் 8 ஆம் பிரிவில் 66 (ஈ) 6 உப பிரிவில் இரகசிய வாக்கெடுப்புக்கு செல்வது அவசியமற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி நோக்கும்போது பகிரங்க வாக்கெடுப்பைத் தவிர்த்து இரகசிய வாக்கெடுப்புக்கு செல்வது குறித்து சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. 

ஆகவே நாட்டு மக்களையும் சபையையும் தவறாக வழிநடத்துவதை ஆளும் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் தேசி மக்கள் சக்தியை பல அரசியல் மேடைகளிலும், தேர்தல் பிரச்சார நேரங்களிலும் தாறுமாறாக விமர்சித்து வந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், தற்போது ஒருசில உள்ளூராட்சி மன்றங்களில் தேசி மக்கள் சக்திக்கு பூரண ஆதரவை வழங்கி இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதுடன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை பலரும் விமர்சித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular