சர்வதேச ரோல் பந்து விளையாட்டில் கலந்து கொள்வதற்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் கென்யா பயணமாக உள்ளனர்.
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெறவுள்ள சர்வதேச ரோல் பந்து போட்டியில் இலங்கை அணியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு இன்று காலை கல்லூரியின் முதல்வர் சவரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது.
சர்வதேச ரோல் பந்து போட்டி கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் 22ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டியில் கலந்துகொள்வதற்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து வெளிநாடு செல்லவுள்ள நிலையில் அவர்கள் பாடசாலை சமூகத்தினால் வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
