கம்பஹாவில் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை!
இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த உப மின் நிலையத்தின் ஊடாக மின்விநியோகிக்கப்படும் வழிகளில் அத்தியாவசியமான பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஜூலை 7ஆம் திகதி முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 8.30 மணி வரை 12 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்படும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதனால் இந்த குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபை பிரதேசங்களுக்கு மற்றும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா – எல, கடான, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பிரிவுகளுக்கும் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இந்த நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படுவதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக தமது வருத்தத்தை தெரிவிப்பதுடன் நீரை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.