நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தில் கடந்த மூன்று நாட்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களுடன் கூடிய 121 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
08 மாவட்டங்களின் அதிக ஆபத்துள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் மூன்று நாட்களாக இந்த விசேட நுளம்பு ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அதன் வைத்திய நிபுணர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது 229 பாடசாலைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 29 பாடசாலைகளில் நுளம்பு குடமிகளுடன் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்பதால், பாடசாலைகளில் இந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதில் அதன் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் அனோஜா தீரசிங்க கூறினார்.
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஆறாவது நாளான நேற்று (05) 19,774 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தேசிய டெங்கு ஒழுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்ட வளாகங்களின் எண்ணிக்கை 5,085 என்றும், நுளம்பு குடமிகள் காணப்பட்ட வளாகங்களின் எண்ணிக்கை 567 என்றும் வைத்திய அனோஜா தீரசிங்க குறிப்பிட்டார்.