மஸ்கெலியாவில் மரத்தின் கிளை முறிந்து தலையில் வீழ்ந்ததில் இன்று (19) காலை அப்பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் தேயிலைத் தோட்டத்தில் விறகு சேகரிக்கச் சென்றிருந்தபோதே இந்த அதிர்ச்சிகர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் மஸ்கெலியா – பிரவுன்சிக் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் உடலம் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
