புத்தளம், கரிக்கட்டை சமகி ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த எசல பெரஹெர நிகழ்வு இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கரிக்கட்டை சமகி ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற குறித்த எசல பெரஹெர நிகழ்வில், சமகி ஆரம்பப் பாடசாலையின் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பாரம்பரிய மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் ஐந்தாவது முறையாகவும் மிகவும் சிறப்பாக நடைபெற்ற குறித்த எசல பெரஹெர நிகழ்வு, கரிக்கட்டையில் ஆரம்பாகி, நாகவில்லு வரை சென்று, மீண்டும் கரிக்கட்டை சமகி ஆரம்பப் பாடசாலையை வந்தடைந்தது.
குறித்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன், சமகி ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமகி ஆரம்பப் பாடசாலை பழைய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





