மீமுரே கரம்பகெட்டிய பகுதியில் வேன் ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் ஏற்கனவே இருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவர்கள் மீரிகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (19) மாலை இடம்பெற்ற விபத்தில் 04 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்த நிலையிலேயே இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.