இத்தாலியில் கார் ரேஸில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஸின் போது டிராக்கில் முன்னால் சென்ற கார் திடீரென நின்றதால், அந்த கார் மீது அஜித்குமார் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அஜித் குமார் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இத்தாலியில் நடைபெற்று வரும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அப்போது அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. அஜித்குமார் காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென நின்றதால் அந்த கார் மீது அஜித்குமார் கார் மோதியது.
எனினும் நடிகர் அஜித்குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. விபத்து நடந்தது தொடர்பான வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் ரேஸிங் தொடங்கிய அரை மணி நேரத்தில் டிராக்கில் முன்னால் சென்ற கார் நின்றதால், அந்த கார் மீது அஜித்குமார் கார் மோதும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் அஜித்குமார் காரின் இடதுபுறத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. இதையடுத்து டிராக்கில் இருந்து அந்த கார்கள் கிரேன்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. காரில் இருந்து வெளியே வந்த நடிகர் அஜித்குமார் காரின் உடைந்து கிடந்த பாகங்களை ஒன்றாக எடுத்து போட்டார். அஜித்குமார் அடுத்தடுத்து விபத்தில் சிக்குவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.