ஸ்வீடனில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் பணியின்போது தனது ஊழியர்கள் சுயஇன்பம் செய்து கொள்ள தினமும் 30 நிமிடம் பிரேக் வழங்குகிறது. மேலும் சுயஇன்பத்துக்காக தனி அறையை ஏற்படுத்தி வழங்கி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் லஞ்ச் பிரேக் இருப்பதை நாம் கேள்வி பட்டு இருப்போம். சில தனியார் நிறுவனங்களில் டீ பிரேக் கூட அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள அலுவலகத்தில் 30 நிமிடம் பிரேக் வழங்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். இந்த வினோத ‛பிரேக்’கை வழங்கி உள்ள நிறுவனத்தின் பெயர் எரிகா லஸ்ட் பிலிம்ஸ். இந்த நிறுவனம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 40க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் நிறுவனராக எரிகா லஸ்ட் இருக்கிறார்.
இந்நிலையில் தான் கொரேனாா பரவலுக்கு பிறகு ஊழியர்கள் மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக எரிகா லஸ்ட் உணர்ந்தார். ஏனென்றால் மனஅழுத்தத்தால் அவரும் பாதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி ஊழியர்களின் மனஅழுத்தம் நேரடியாக அவர்களின் பணியை பாதித்தது.
இதனால் எரிகா லஸ்ட் ஊழியர்களின் மனஅழுத்தத்தை குறைத்து, அவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டிய சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கையை தொடங்கினர். அதன் ஒருபகுதியாக தினமும் பணியின்போது ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள 30 நிமிடம் ‛பிரேக்’ வழங்கி வருகிறார்.
மேலும் ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள பணியாளர்களுக்கு தனியாக அறை ஒன்றையும் அவர் ஒதுக்கி வழங்கி உள்ளார். அந்த அறையை சுயஇன்ப நிலையம் என்று ஊழியர்கள் அழைக்கின்றனர். இதன்மூலம் ஊழியர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு பணியை உற்சாகத்துடன் செய்வதாக அவர் கூறியுள்ளார். முதலில் இந்த சுயஇன்ப ‛பிரேக்கை’ அவர் சோதனை முயற்சியாக கொண்டு வந்தார். அவரது இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதனை நிரந்தரமாக்கி உள்ளார்.