தனது வீட்டு ஒழுங்கையில் நித்திரை கொண்டிருந்த மைத்துனரின் மீது கவனயீனம் காரணமாக டிப்பர் ரக வாகனம் ஒன்றினால் தவறுதலாக ஏற்றப்பட்ட நிலையில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடொன்றில் சல்லிக்கல்லினை பறித்துவிட்டு வாகனத்தை திருப்பி வந்துகொண்டிருந்த வேளை இரவு நேரமாகையால் குறித்த ஒழுங்கையில் தனது மைத்துனர் படுத்திருந்ததை அறிந்திருக்காத நிலையில் குறித்த இளைஞன் மீது டிப்பர் வாகனம் ஏறியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
02.08.2025 இன்று காலையிலே குறித்த இளைஞன் வாகனத்துள் நசுங்கி நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதை அறிந்து மைத்துனரான வாகனச்சாரதி நெடுங்கேணிப் பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக அறிய முடிகிறது.
இச்சம்பவும் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெடுங்கனி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
