புத்தளம் எருக்கலம்பிட்டியின் உள்ளக வீதியில் உள்ள மினகம்ப விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு, புதிய வீதி மின் விளக்குகள் பொருத்தும் பணி இன்று புத்தளம் பிரதேசபையினால் மேற்கொள்ளப்பட்டது.
புத்தளம் பிரதேச சபையின் பொத்துவில்லு வாட்டார உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், வழிகாட்டுதலிலும் குறித்த வீதி மின்கம்ப விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
இன்றைய தினம் புத்தளம் எருக்கலம்பிட்டியின் A பகுதியில் உள்ள சுமார் 26 மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு, இவ்வாறு மின் விளக்குகள் ஒளிரச்செய்யப்பட்டன.
மேலும் எதிர்வரும் நாட்களில் புத்தளம் எருக்கலம்பிட்டியின் B,C மற்றும் மந்தக்காடு பகுதிகளின் உள்ளக வீதிகளில் உள்ள மின்கம்ப விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு, தேவைப்படும் பட்சத்தில் புதிய மின்கம்ப விளக்குகள் பொருத்தப்படும் என புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா தெரிவித்தார்.
இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் புத்தளம் எருக்கலம்பிட்டியின் பொத்துவிலுக்கான பிரதான வீதியில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
