புத்தளம் எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் அனுசரணையில் இயங்கிவரும், எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் மாதர் சங்கத்தினால் இன்றைய தினமும் புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் இலவச நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.
புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான இலவச நுளம்பு வலைகளே இவ்வாறு இன்று வழங்கிவைக்கப்பட்டது.
புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் 150 நுளம்பு வலைகள் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புத்தளம் எருக்கலம்பிட்டியில் வசிக்கும் மந்தக்காடு பகுதி மக்களுக்கான 30 இலவச நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டிருந்த நிலையில், புத்தளம் எருக்கலம்பிட்டி B பகுதியில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களுக்கு எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் மாதர் சங்கத்தினால் இன்றைய தினம் இலவச நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் வருமானம் குறைந்த புத்தளம் எருக்கலம்பிட்டியில் வசிக்கும் மந்தக்காடு பகுதி மற்றும் B பகுதி தவிர்ந்த ஏனைய குடும்பங்களுக்கான நுளம்பு வலைகள் எதிர்வரும் தினங்களில் வழங்கப்பட உள்ளதாக புத்தளம் எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் தலைவர் M.J.M. சிராஜ் எமது ஊடகத்துக்கு தெரிவித்தார்.
