யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் கடந்த ஐந்து தினங்களாக நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
மாகாண மட்ட உயரம் பாய்தல் போட்டியில் இதுவரை காலமும் காணப்பட்ட சாதனையை மேற்படி கல்லூரி மாணவன் 14 வயதிற்குட்பட்ட உயரம் பாய்தல் போட்டியில் புதிய சாதனையை படைத்து முதலாமிடம் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதேபோல் 18 வயதிற்குட்பட்ட 800M, 1500M, 3000M ஓட்டப்போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரி மாணவன் N.M. நப்ரின் முதலாமிடங்கள் பிடித்து மாகாணத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் 20 வயதிற்குட்பட்ட 1500M, 3000M ஓட்டப்போட்டியில் மேற்படி கல்லூரி மாணவன் A.M. அதீக் இரண்டாமிடங்கள் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் தடகளப்போட்டியில் 20 வயதுப்பிரிவு ஆண்களுக்கான 5000M ஓட்டப் போட்டியிலும் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரி மாணவன்
A.M. அதீக் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டு தேசியமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை 20 வயதிற்குட்பட்ட முப்பாய்தல் போட்டிலும் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரி மாணவன் N.M. அன்சப் முறையே இரண்டாமிடம் மற்றும் நான்காமிடங்கள் பிடித்து பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.

விளையாட்டின் மூலம் பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்த இம்மாணவர்களை வாழ்த்துவதோடு, இவர்கள் தேசிய மட்ட போட்டிகளிலும் வெற்றிபெற பாடசாலை சமூகம் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தேசிய மட்டத்திலும் சாதனை படைக்க எமது eNews1st ஊடக அமைப்பு சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

