இம்முறை இடம்பெற்ற (2025) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரியில் 5 மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
அதில் ஹிலால் சப்கி முஹம்மத் 165 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் 131 என்ற வெட்டுப்புள்ளியை கடந்து, எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரியை சேர்ந்த ஐந்து மாணவர்கள் திறமைச் சித்தி பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் கெளவரத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் ஹிலால் சப்கி முஹம்மத் 165 புள்ளிகளையும், முஹம்மது சஜாத் சஹாம் 152 புள்ளிகளையும், இல்முதீன் முஹம்மது இனாஸ் 143 புள்ளிகளையும், சபான் முஹம்மது அஸ்ஜாத் 142 புள்ளிகளையும், பாஹில் அப்துல்லாஹ் 138 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களை சிறப்பாக தயார்ப்படுத்திய ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளதுடன், பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களையும் பாராட்டியுள்ளனர்.
மேலும் பரீட்சியில் தோற்றி சித்திபெற தவறிய மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.