புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையைச் சேர்ந்த உயர் தரம் மற்றும் தரம் 5 மாணவர்கள் நேற்று கொழும்பின் முக்கிய இடங்களுக்கு ஒருநாள் கல்விச்சுற்றுலா சென்றனர்.
கொழும்பின் முக்கிய இடங்களான கொழும்பு துறைமுகம், நூதனசாலை, விக்டோரியா பூங்கா, காலி முகத்திடல், போர்ட் சிட்டி மற்றும் வன் கோல்பேஸ் ஆகிய இடங்களுக்கு இவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
சுமார் 90 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த கல்விச்சுற்றுலாவில் கலந்துகொண்டதுடன், இவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய ஒழுங்கு வசதிகளை சஹாப்தீன் லுக்மான் (சிரேஷ்ட துணை சுங்கத்திணைக்கள பணிப்பாளர்) மற்றும் ஐயூப் சபாஹி (தொழிலதிபர்) ஆகியோர் மேற்கொண்டனர்.
மேலும் குறித்த கல்விச்சுற்றுலாவில் பெரிதும் உதவிய குறித்த இருவருக்கும் பாடசாலை சமூகம் தமது நன்றிகளை தெரிவித்துள்ளதுடன், குறித்த சுற்றுப்பயணம் மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

