மத்திய அதிவேக வீதியின் கடவத்தை – மீரிகம வீதிகளின் கட்டுமானப் பணிகள் புதன்கிழமை (17) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடவத்தை வீதியிலிருந்து முதல் 500 மீற்றர் வரையான கட்டுமானப் பணிகள் தொடங்குகின்றன. இதற்கு 8.6 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த வீதி கட்டுமானப் பணிகளுக்காக சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்படுகிறது.
இந்த வீதியின் 37 கிலோ மீற்றர் வரையான கட்டுமான பணிகள் 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.