தற்போதைய வறண்ட வானிலை காரணமாக சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புத்தளத்தின் உப்பு அறுவடையில் குறிப்பிடத்தக்க அளவு ஒரு சாதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் வறண்ட வானிலை தொடர்ந்தால், நாட்டின் உப்புத் தேவையில் பெரும்பகுதியை புத்தளத்தில் இருந்து பூர்த்தி செய்ய முடியும் என்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
உப்பு அறுவடை தற்போது ஒரு லட்சம் மெட்ரிக் தொன்னைத் தாண்டும் அளவில் இருப்பதாக உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பெய்த கனமழையால், புத்தளத்தில் உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாகவும், உப்புத் தொட்டிகள் மழைநீரில் நிரம்பி வழிந்ததால் தொழில்துறை முடங்கியதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
அதனால்தான், உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, நாட்டின் உப்புத் தேவைக்குத் தேவையான உப்பை இந்திய மாநிலமான குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் நாட்டில் மொத்த உப்புத் தேவை ஒரு லட்சத்து எண்பதாயிரம் மெட்ரிக் தொன்னை நெருங்கியுள்ள நிலையில், இது உணவு மற்றும் பிற பொருட்களுக்குத் தேவையான அளவு எனவும் புத்தளம் தவிர, ஆனையிறவு மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் உப்பு உற்பத்தி அதிக அளவில் இடம்பெறுவதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.