இலங்கை கடற்படை, 2025 செப்டம்பர் 18, அன்று சிலாவத்துறை, பண்டாரவெளி கடற்கரைப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று ஏழு (1197) கிலோகிராம் பீடி இலைகள், ஆயிரத்து எழுநூற்று அறுபத்தைந்து (1765) சவர்க்கார கட்டிகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவற்றுடன் ஒரு (01) சந்தேக நபரும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
அதன்படி, 2025 செப்டம்பர் 18, அன்று காலை சிலாவத்துறையின் பண்டாரவெளி கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிறுவனம் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு (01) சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் நானூற்று எண்பத்தைந்து (485) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் எழுநூற்று ஆறு (706) சவர்க்கார கட்டிகள், ஒரு (01) சந்தேக நபர் மற்றும் டிங்கி படகு ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட மேலதிக தேடுதலின் போது, குறிப்பிட்ட கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எழுநூற்று பன்னிரண்டு (712) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஆயிரத்து ஐம்பத்தொன்பது (1059) சவர்க்காரக் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலும், சந்தேக நபர், டிங்கி படகு, 1197 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் 1765 சவர்க்காரக் கட்டிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.
