ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 30வது ஆண்டு நிறைவு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று (27) இலங்கை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் நீண்டகால தலைவருமான கலாபூஷணம் அல்ஹாஜ் என்.எம். அமீன் ஓய்வுபெறுகின்ற நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் இன்றைய வருடாந்திர பொதுக் கூட்டத்தில் புதிய தலைவர் மற்றும் செயலாளர் உற்பட புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
அந்த வகையில் போரத்தின் புதிய தலைவராக எம்.பி.எம். பைரூஸும் அவர்களும் புதிய செயலாளராக ஷம்ஸ் பாஹிமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந் நிகழ்வில் ஊடகத் துறைக்கு நீண்ட காலமாக விலைமதிப்பற்ற சேவையைச் செய்த பத்திரிகையாளர்கள் பாராட்டப்பட்டதுடன், திடீர் பேரழிவுகள் ஏற்பட்டால் பத்திரிகையாளர்களுக்கு உதவுவதற்காக நிதியும் ஒன்றும் நிறுவப்பட்டது.
இலங்கைக்கான சவுதி அரேபியாவின் தூதர் அதிமேதகு காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி, இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் அதிமேதகு இஹாப் கலீல், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷா பண்டார, முஸ்லிம் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எம்.அமீன், பொதுச் செயலாளர் என்.ஏ.எம்.சாதிக் ஷிஹான், பொருளாளர் கியாஸ் ஏ புஹாரி, தேசிய அமைப்பாளர் இர்ஷாத் ஏ காதர் மற்றும் முஸ்லிம் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பத்திரிகையாளர்கள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

