ஜூட் சமந்த
கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை உடைத்து ரூ.8,51,000 மதிப்புள்ள வெளிநாட்டு நாணயம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து தன்கொடுவ காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
தன்கொடுவ, கோனவிலாவில் உள்ள புனித ஜோசப் தேவாலயத்தின் பொறுப்பாளர் பாதிரியார் ஜூட் பிரான்சிஸ் அந்தோணி அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
நேற்று 7 ஆம் தேதி இரவு 8.00 மணியளவில் காவல்துறைக்கு சென்று புகார் அளித்த தேவாலயத்தின் பொறுப்பாளர் பாதிரியார், தான் நேற்று காலை வேலையில் தேவாலயத்தில் இல்லை என்றும், மாலை வந்தபோது விடுதி உடைக்கப்பட்டதை அறிந்ததாகவும் தெரிவித்தார்.
அதன்படி, தேவாலயத்திற்குச் சொந்தமான விடுதிக்குச் சென்ற போலீசார், விசாரணையில் திருடப்பட்ட சொத்து தொடர்பான தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.
யார் கொள்ளை செய்தார்கள் என்பது தொடர்பான விடயம் இன்னும் தெரியவில்லை.
தன்கொடுவ காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.