பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் முதல் 8 மாதங்களில் விமான பயணிகளைக் கையாள்வதில் 14 சதவீதம் அதிகரிப்பை அடைந்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் முதல் 08 மாதங்களில் 14 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் 08 மாதங்களில், 58 லட்சத்து 37,351 பயணிகள் வருகை தந்துள்ளதுடன், மேலும் 2025 ஆம் ஆண்டின் முதல் 08 மாதங்களில், 66 லட்சத்து 30,728 பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
இது 2024 ஆம் ஆண்டின் முதல் 08 மாதங்களுடன் ஒப்பிடும்போது 13.59 சதவீத வளர்ச்சியாகும்.
2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் அதிகபட்சமாக 9 லட்சத்து 22,993 பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரவிருக்கும் நாட்களில் பயண சீசன்களுக்கான பருவ காலம் தொடங்குவதால் புதிய விமான சீசன்களுக்கான தேவை அதிகரித்துள்ளதுடன், குறித்த பருவ காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பவதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.