ஜூட் சமந்த
நேற்று 9 ஆம் தேதி இரவு சிலாபம் நகர மையத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் புத்தளம் மாவட்ட கிளை ஊழியர்களால் இந்த தீப்பந்த போராட்டம் மற்றும் கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
நாட்டில் அரச வங்கிகள் எதிர்கொள்ளும் தற்போதைய மற்றும் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக இந்த தீப்பந்த போராட்டம் மற்றும் கடவுள் பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல அரச வங்கிகளின் ஊழியர்கள் இந்த தீப்பந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.



