ஜூட் சமந்த
இந்தியாவிலிருந்து கடல் வழியாக திருட்டுத்தனமாக நாட்டிற்குல் கொண்டு வரப்பட்ட 1324 கிலோகிராம் பீடி இலைகளையும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 90,000 சிகரெட்டுகளையும் மாரவில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மாரவில, முடுகடுவ பகுதியில் இன்று 10 ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பீடி இலைகள் 34 பொலிதீன் பைகளில் அடைக்கப்பட்டிருந்ததுடன், 450 சிகரெட் பண்டல்கள் அடங்கிய 09 பெட்டிகளில் சோதனை நடவடிக்கையின்போது அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பீடி இலைகள் மற்றும் சிகரெட்டுகள் 04 சிறிய படகுகளில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் சிகரெட்டுகள் வென்னப்புவ – வைகாலவில் உள்ள கலால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
