புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் அபிவிருத்திப் பணிக்காக அதே பாடசாலையின் பழைய மாணவர்களினால் ஒரு தொகை நிதி இன்று 10.10.2025 வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையில் கல்வி பயின்ற 2002 ஆம் ஆண்டு சாதரண தர மாணவிகளினால் சுமார் 70 ஆயிரம் ரூபாய் பணத்தொகை பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. ஹுசைமத் அவர்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.
பாடசாலையில் நிலவிவரும் நிதிப்பற்றாக்குறையை கருத்திற்கொண்டும், பாடசாலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி பணிகளுக்காகவும் குறித்த மாணவிகளினால் இந் நிதிப்பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பாடசாலையின் பழைய ஆண் மாணவர்கள் மாத்திரமே அதிகமான நிதிப்பங்களிப்புகள் மற்றும் பொருளாதார உதவிகளை செய்திருக்கும் நிலையில், முதன் முறையாக பாடசாலையின் பழைய பெண் மாணவிகள் முன்வந்து இவ்வாறான நிதிப்பங்களிப்பை செய்துள்ளமை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.