Saturday, October 11, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsவெளியாகியது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

வெளியாகியது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வழங்க நார்வே நோபல் குழு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் வெனிசுலாவைச் சார்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1967 ஆம் ஆண்டு பிறந்த மரியா வெனிசுலாவில் முக்கியமான எதிர்கட்சித் தலைவராக உள்ளார். தொடர்ந்து, வெனிசுலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகம் மலர வேண்டுமெனவும் அமைதியாக போராடி அதில், வெற்றியும் கண்டுள்ளார். இத்தகைய சூழலில்தான், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை கடந்த 6 மாதங்களில் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வழி மேல் விழி வைத்து காத்திருந்த நிலையில் அவரது கனவு பொய்த்துள்ளது.

கடந்த, சில மாதங்களாகவே அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்குதான் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எதிர்பார்ப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டு இருந்த நிலையில், வெனிசுலாவைச் சார்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு கொடுக்கப்பட்டு இருப்பது ட்ரம்புக்கு ஏமாற்றம் அளிக்கும் அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular