ஜூட் சமந்த
தனது மகனை சுட்டுக் கொல்ல முயன்றதாக சந்தேக நபர் ஒருவர் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரச்சிகட்டுவ – அத்தங்கனை பகுதியில் இன்று 12 ஆம் திகதி மதியம் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
தொடுவாவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கல்கட்டஸ் வகை துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர் தனது குழந்தை மற்றும் மனைவியை விட்டுவிட்டு தொடுவாவ பகுதியில் வேறொரு பெண்ணுடன் வசித்து வந்தார். பல வருடம் கழித்து ஆரச்சிகட்டுவ – அத்தங்கனைக்குத் திரும்பிய சந்தேக நபர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மீண்டும் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார். 4 வயதில் தன்னையும் தாயையும் விட்டுச் சென்ற தனது தந்தையை 31 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருவதை குழந்தை விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட வாய்தர்க்கத்தினால் மகனை சுட்டுக் கொல்ல முயன்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆரச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.