வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தகவாணி அமைச்சின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 56 பேருக்கு 5மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அமைச்சின் செயலாளர் முத்துலிங்கம் நந்தகோபாலன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு திணைக்கள மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தார்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
அடுத்த வருடத்தில் மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இன்று தமிழ் கட்சிகள் ஒன்று சேர்கிறார்கள், முதலமைச்சர் பொது வேட்பாளரை களம் இறக்க உள்ளதாக எல்லாம் செய்தி வருகின்றது. இன்னும் ஒன்றையும் சொல்கின்றனர்.
தமிழர்களுக்காக போராடும் கட்சி என்று கூறிக்கொண்டவர்கள் தமிழர்களால் துரோகிகள் பட்டம் சூட்டிய கட்சிகளுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். மாகாண சபைக்கு முதல் நகரசபைகளை ஒழுங்காக நடாத்தி காட்டுங்கள் என அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.