கட்டுக்கரைக்குளத்தின் கீழான 2025 /2026 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச்செய்கை முன்னோடிக் கூட்டம் மன்னார் மாவட்டசெயலாளர் க.கனகேஸ்வரன் அவர்கள் தலைமையில் இன்று 22.10.2025 இடம்பெற்றது.
விவசாய அமைச்சு ஊடாக 4% வட்டி உடனான கடன் தொடர்பான விழிப்புணர்வு மாவட்ட விவசாய பணிப்பாளரினால் எடுத்துரைக்கப்பட்டது .
விவசாய கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விளக்கங்கள் மன்னார் மக்கள் வங்கி அலுவலர்கள் மூலமாக சாதகமான முறையில் வழங்கப்பட்டது. விவசாயத்திற்கு போதுமான அளவு நீர் கிடைக்க பெற்று வருவதாக நீர் பாசன திணைக்கள அதிகாரிகள் உறுதி செய்ததுடன், சாதகமான நிலை உள்ளத்தையும் உறுதிப்படுத்தினர்.
விவசாய கடன் திட்டத்தின் முதற் கட்டமாக நான்கு விவசாயிகளுக்கு மக்கள் வங்கியின் மன்னார் கிளை முகாமையாளர் ஜனாப் ஹக் முஹம்மது அரூஸ் அவர்கள் காசோலைகள் வழங்கி வைத்தார்.
மன்னார் மாவட்ட பெரும்போக பயிர்ச்செய்கைக்கான வங்கிக்கடன் இம்முறை முதன்முதலாக மக்கள் வங்கியின் மன்னார் கிளை ஊடாகவே வழங்கப்பட்டுள்ளது.
கமநல காப்புறுதி சபையின் காப்புறுதி நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்கள் உதவி பணிப்பாளர் ஊடாக வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் காணி, மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் (நானாட்டான், மன்னார், மாந்தைமேற்கு), உதவி பிரதேச செயலாளர்கள் (மன்னார் நகரம், மாந்தை மேற்கு), உதவி மாவட்ட செயலாளர், கமநல காப்புறுதி சபை உதவி பணிப்பாளர், நீர்ப்பாசனப் பணிப்பாளர் மன்னார், விவசாய திட்ட முகாமையாளர் மற்றும் தலைவர், பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் (முருங்கன்), கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் (மன்னார்), பிரதி விவசாயப் பணிப்பாளர் (உயிலங்குளம்), பிரதிப் பணிப்பாளர் கால்நடை அபிவிருத்தித் திணைக்களம், உதவிப்பணிப்பாளர், வங்கிகள் அலுவலர்கள், கமத்தொழில் காப்புறுதிச்சபை, திட்ட முகாமைத்துவக் குழு அங்கத்தவர்கள், விவசாய அமைப்புகளின் அங்கத்தினர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




