புத்தளம் – கொழும்பு பிரதான வீதி நாகவில்லு பகுதியில் இன்று காலை 23.10.2025 ஐந்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியை பின்னால் வந்த தண்ணீர் பவுசர் வண்டி முந்திச்செல்ல முற்பட்டதில் குறித்த விபத்து நாகவில்லு வைட் ஹோல் அருகில் இடம்பெற்றுள்ளது.
புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியை பின்னால் வந்த தண்ணீர் பவுசர் வண்டி முந்திச்செல்ல முற்பட்டபோது, கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியுடன் மோதுவதை தவிர்க்கும் வகையில் செயற்பட்ட தண்ணீர் பவுசர் வண்டி, முன்னாள் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியதில், முச்சக்கரவண்டி கடும் சேதத்திற்குள்ளாகியது.
அதே சமயம், குறித்த தனியார் பஸ் வண்டி விபத்து இடம்பெற்ற குறித்த இடத்தில் வீதியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலுடனும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் வீதியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலில் இருந்த நபர் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இவ் விபத்தில் முச்சக்கரவண்டி, தண்ணீர் பவுசர் வண்டி, தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகிய வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
