(உடப்பு க.மகாதேவன்)
புத்தளம் உடப்பு, ஆண்டிமுனைப் பகுதியிலுள்ள இயந்திரப் படகு கடற்றொழிலாளர்களின் வலையில் இன்றுகாலை (9) பெருந்தொகையான சாலைமீன்கள் பிடிக்கப்பட்டன.
அதிகாலை 4 மணியளவில் இவர்கள் கடலுக்குச்சென்று மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவது வழக்கமாகும். இன்று இவர்களுக்கு பெருந்தொகையான சாலை மீன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சாலை மீன் சுமார் ஒரு கிலோ கிராம் 100 ரூபா வரை சந்தையில் விற்கப்பட்டதாக மீனவர்கள் கூறினர். பெருந்தொகையான சாலை மீன்கள் பிடிபட்டதினால் மீனவர்கள் சந்தோஷத்தில் காணப்பட்டதுடன், நுகர்வோரும் குறைந்த விலைக்கு மீன்களை கொள்வனவு செய்துள்ளனர்.




