ஜூட் சமந்த
3 கிலோகிராம் ஐஸ் வைத்திருந்ததாகவும், போதை வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் புத்தளம் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், முள்ளிபுரம் பகுதியில் இன்று 9 ஆம் தேதி மதியம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
புத்தளம், முள்ளிபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரையே ஐஸ் போதைப் பொருளுடன் போலீசார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஊதுபத்தி விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குடு ரக போதைப்பொருள் தொகை ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர் யாரிடமிருந்து போதைப்பொருள் பெறுகின்றார்? அதை யாருக்கு விற்பனை செய்கிறார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தடுப்பு உத்தரவின் பேரில் சந்தேக நபரை விசாரணைக்காக தடுத்து வைக்க உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


