கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் குறிப்பாக நகரத்திலும் நகரத்தை சூழ்ந்துள்ள பகுதிகளிலும் படர்ந்துள்ள மண்வளத்தை உறிஞ்சி அழிக்கும் பாத்தீனியத்தை அழித்து ஒழிப்பதற்கான தீர்மானம் கரைச்சி பிரதேச சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
அதன்படி பிரதேசத்தில் காணப்படுகின்ற பார்த்தீனிய செடிகளை வேருடன் பிடுங்கி பிரதேச சபை அலுவலகத்தில் கையளிக்கின்ற ஒவ்வொரு கிலோ பாத்தீனியத்துக்கும் இருநூறு ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு நடவடிக்கையானது .இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிடுங்குகின்ற போது கைகளில் கையுறை அல்லது பொலீத்தீன் பை போன்ற பாதுகாப்பு கையுறைகளை அணிந்து அதனை அகற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன், வேருடன் கொண்டு வரப்படுகின்ற செடிகளுக்கு மாத்திரமே பணம் வழங்கப்படும் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்தார்.
இன்றைய தினம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.




