ஜூட் சமந்த
மாதம்பை பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முதியோர் விழா நேற்று 12 ஆம் தேதி மாதம்பை – உரலிய கிராமத்தில் நாள் முழுவதும் நடைபெற்றது.
மாதம்பை பிரதேச செயலகத்தின் கிராம அலுவலர் பிரிவுகளில் நிறுவப்பட்ட முதியோர் சங்கங்களின் உறுப்பினர்கள் தங்கள் திறமைகளை இதன்போது வெளிப்படுத்தினர்.
நடனம், பாடல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த முதியோர் விழா “தேதுவர அபிமான் -2025” என்று பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



