ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் கைது
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் நேற்று 2025.11.13 அன்று குற்றவியல் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் பெருமளவான ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த வகையில் 287 கிராம் 650 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் 168 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் உடபத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குளியாபிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


