தொல். திருமாவளவன் ஈழத்தில் வந்து தனது அரசியல் ரீதியான செயற்பாட்டை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை வைத்து விற்றுப் பிழைத்திட ஈழத் தமிழர்கள் ஆக ஒரு போதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செ. நேசன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகின்ற இந்த இடம் ஒன்றும் அரசியல் வியாபாரிகளின் விளம்பர மேடை இல்லை எனவும், இது எங்கள் நம்பிக்கை வழிபாட்டு ரீதியான வரலாற்று திடல் ஆகும் எனவும் அவர் தனது முகப்புத்தகம் ஊடாக கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின்போது மனிதாபிமானம் அற்ற வகையில் போரியல் விதிமுறைகளை மீறி இனவழிப்பு நடவடிக்கைகளை வெளிப்படையாக நடத்திய இலங்கை அரசு உட்பட அதற்கு ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு எதிராக நீதி வேண்டி தொடர்ந்து ஈழத் தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் கூடும் இந்த புனித தளத்தில் சப்பாத்து கால்களுடன் ஏறி நின்று கொண்டிருப்பதை விட எமது ஈழத் தமிழர்கள் முகத்தில் செருப்பை கொண்டு அடித்து இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இந்த விடயம் திருமாவளவன் தரப்பினர் ஈழத் தமிழர்கள் முகத்தில் செருப்பால் அடித்ததாகவே தமிழ் தேசிய மக்கள் ஆகிய நாம் கருதுகிறோம்.
குறித்த விடயத்தை எந்த காரணம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கு எதிராக தமிழீழ மக்களுக்கான அமைப்பினர் ஆகிய தமிழ் தேசிய மக்கள் இயக்கம் ஆகிய நாம் எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
செ. நேசன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ் தேசிய மக்கள் இயக்கம்


