அனர்த்த நிலைமையின் போது பிரதேச சபை உறுப்பினர்களின் வகிபாகம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர். A.M.R.N.K அழகக்கோன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டார்.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ப.சத்தியராகவன், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி, பூநகரி, கரைச்சி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மழை மற்றும் ஏனைய இயற்கை அனர்த்த நிலைமையின்போது பிரதேச சபை உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்று விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
தற்போது நாடு பூராகவும் கனமழை தொடர்வதால், இவ்வாறு ஒரு சிறப்புமிக்க கலந்துரையாடல் இடம்பெற்றிருப்பது, ஒரு நல்ல தருணம் என தெரிவிக்கப்படுகிறது.



