கற்பிட்டியில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் கடலுக்குள் உயிரிழப்பு!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டியில் சுழியோடி கடல் அட்டை மற்றும் சங்கு எடுக்கும் தொழிலில் கடந்த பல வருடங்களாக ஈடுபாட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர் கடலிலே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க மொஹமட் ஜெமில் 9 பிள்ளைகளின் தந்தை நேற்று புதன்கிழமை (19) இரவு கடலுக்குள் வைத்து திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று கற்பிட்டி உச்சமுனை கடற்பரப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சக கடற்றொழிலாளர்களின் உதவியுடன் இரவோடு இரவாக உயிரிழந்த மொஹமட் ஜெமிலின் உடல் கரைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் கற்பிட்டி வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு உயிரிழந்தவரின் உடல் அனுப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


