நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை குறித்த அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 352ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று காலை 12.02.2025 அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான இந்த அனர்த்தத்தினால் 3 லட்சத்து 82ஆயிரத்து 651 குடும்பங்களைச் சேர்ந்த 13 லட்சத்து 73ஆயிரத்து 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 432 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 15,688 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 57ஆயிரத்து 790 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 4ஆயிரத்து 597 பேர் 1,368 இடைத்தங்கல் நிலையங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


