புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் N.T.M. தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்ட முத்து முஹம்மத் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு மக்கள் காங்கிரஸ் ஊடாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமாகிய N.T.M. தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மாகாண சபையிலிருந்து பாராளுமன்றத்திற்கு சென்று அதனூடாக புத்தளம் மண்ணுக்கு தேவையான அபிவிருத்திகளை வழங்க புத்தளம் மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மக்கள் சந்தோசம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறானதொரு அனர்த்த நிலைமையில் புத்தளம் மக்கள் சார்பாக N.T.M. தாஹிர் அவர்களுக்கு பாராளுமன்ற நியமனம் வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகிறனனர்.
இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமாகிய N.T.M. தாஹிர் அவர்களுக்கு நாகவில்லு ACMC கிளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக புத்தளம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஜனாப் SM. ரிஜாஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் சேவையின் மூலம் புத்தளம் மாவட்டம் மேலும் பல அபிவிருத்திகளை காண உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் புத்தளம் மண்ணிலிருந்து பாராளுமன்றம் செல்லும் இரண்டாவது உறுப்பினர் N.T.M. தாஹிர் என்பது குறிப்பிடத்தக்கது.



