அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
புத்தளம் – நாகவில்லு பிராந்திய கிளை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல்-ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்களுக்கு, நாகவில்லு பிராந்திய கிளை சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக புத்தளம் பிரதேசயின் முன்னாள் உறுப்பினர் SM. ரிஜாஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தால் தோல்வியுற்ற என்.டி.எம். தாஹிர் அவர்களை, புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக நியமித்திருப்பது எங்கள் பிராந்திய மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகத்திற்கு வழங்கிய செய்தியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நடப்பு அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையில், புத்தளம் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றக்கூடிய திறமைமிக்க தலைவரின் பாராளுமன்றப் பொறுப்பேற்பு அவசியமான ஒன்றாக நாங்கள் கருதுகின்றோம்.
என்.டி.எம். தாஹிர் அவர்கள் புத்தளம் மாவட்ட மக்களின் நலனையும், நாகவில்லு பிராந்தியத்தின் அபிவிருத்தி தேவைகளையும் முன்னிலைப்படுத்தி செயல்படுவார் என எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாகவில்லு பிராந்திய கிளை சார்பில், பாராளுமன்ற உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் அவர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகளையும் முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


