நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவ பல நாடுகளும் முன்வந்துள்ளது.
வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட நாளிலிருந்து பாகிஸ்தான் மற்றும் இந்திய இராணுவங்கள் தொடர்ச்சியாக மீட்பு பணிகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கிவருகிறது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடைப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் உள்ள பாலம் ஒன்று தாழ் இறங்கிதன் காரணமாக, முல்லைத்தீவு – கிளிநொச்சி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் உள்ள குறித்த பாலத்தினை புனரமைக்கும் பணியை இன்று ஆரம்பித்துள்ளனர்.
இன்று பிற்கல் கிளிநொச்சிக்கு வருகை தந்த இந்திய இராணுவ பொறியியல் குழு, புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





