தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றுள்ள புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் NTM. தாஹிர் மரைக்கார், முதலாவது பாராளுமன்ற அமர்வை முடித்துக் கொண்டு ஆரவாரமாக ஊர்வலம் எதுவும் செல்லாது தனது மாவட்ட மக்களின் சோகத்தில் பங்கெடுத்தவிடயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொற்றாமுல்லை, தும்மோதர, நாத்தான்டிய, மாதம்ப போன்ற பிரதேசங்களுக்கு நேற்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களோடு புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் NTM.தாஹிர் அவர்கள் விஜயம் மேற்கொண்டு அந்த மக்களுடைய தேவைகளை கேட்டறிந்ததுகொண்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தி விரைந்து செயற்படுவதாக உறுதியளித்தார்.
இதேவேளை குறித்த அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளதுடன், மக்களுக்கான நிவாரண உதவித் திட்டங்களை விரைவாக வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரச அதிகாரிளுடன் இணைந்து மேற்கொள்வது தொடர்பாகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





