நாட்டின் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (7) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய 13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு நிற (Red) அதி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் (Orange) நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற (Yellow) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மல்வத்து ஓயா ஆற்றின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளதோடு, குறித்த ஆற்றை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


