கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்திற்குற்பட்ட அக்கராஜன் குளத்தின் அணைக்கட்டில் உடைவு காணப்படுகின்ற நிலையில் விவசாயிகள் சேர்ந்து மண்மூடை கொண்டு அணைக்கட்டை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொழில்நுட்ப உத்தியோகத்தரின் மேற்பார்வையில் எட்டு கமக்காரர் அமைப்பைச்சேர்ந்த 300ற்கு மேற்பட்ட விவசாயிகள் சேர்ந்து அணைக்கட்டை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அண்மையில் நாட்டை உலுக்கிய வெள்ள அனர்த்தத்தினால் பல குளக்கட்டுகள் உடைக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
அந்த வகையில் கமக்காரர் அமைப்பைச்சேர்ந்த 300ற்கு மேற்பட்ட விவசாயிகள் சேர்ந்து, தமது மண்ணை காக்கும் பணியில் ஈடுபட்டமை பாராட்டத்தக்கது.







